இங்கிலாந்து மற்றும் இந்தியாவுக்கு இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி, பட்டப் படிப்பு முடித்த மாணவர்கள் மேற்படிப்புக்கான விசாவுக்கு விண்ணப்பிக்கும் நடைமுறை தற்போது ஆரம்பமாகியுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்தோனேஷியாவில் நடந்த ஜி20 மாநாட்டில், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இடையே ஒப்பந்தம் ஒன்று சைச்சாத்தானது.
இந்த ஒப்பந்தத்தின் படி, பட்டப் படிப்பு முடித்த மாணவர்கள் மேற்படிப்புகளை மேற்கொள்வதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு பரஸ்பர விசா வழங்கப்படும். இதன்போது, அவர்கள் வேலைக்கும் விண்ணப்பிக்கலாம்.
இங்கிலாந்து செல்வதற்கு இந்திய மாணவர்களும், இந்தியா செல்வதற்கு இங்கிலாந்து மாணவர்களும் இவ்வாறு விண்ணப்பிக்கலாம்.
இலண்டனில் உள்ள இந்தியத் தூதரகத்தில் விண்ணப்பிப்பதற்கான நடைமுறை நேற்று ஆரம்பமாகியுள்ளது. அத்துடன், புதுடில்லியில் உள்ள இங்கிலாந்து தூதரகத்தில் இந்திய மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.