செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா தெலுங்கில் அறிமுகமாகும் ஜானவி கபூர்

தெலுங்கில் அறிமுகமாகும் ஜானவி கபூர்

1 minutes read

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த வாரிசும், பொலிவூட் நடிகையுமான ஜானவி கபூர், தெலுங்கின் முன்னணி நட்சத்திர நடிகரான ஜூனியர் என்டிஆர் கதையின் நாயகனாக நடிக்கும் பெயரிடப்படாத படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் என உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

நட்சத்திரங்களின் வாரிசுகள் திரையில் தோன்றுவது புதிதல்ல என்றாலும், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜானவி கபூர் ஹிந்தி திரைப்படங்களில் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து ஹிந்தி திரைப்படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார். அவரது தாயாருக்கு புகழ்பெற்று தந்த தென்னிந்திய திரையுலகில் அவர் நடிக்க வேண்டும் என அவரது ரசிகர்கள் விருப்பம் தெரிவித்தனர். இது தொடர்பாக அவர் பேசுகையில், “பல தருணங்களில் தென்னிந்திய திரைப்படங்களில் கதாபாத்திரமும், வாய்ப்பும் சரியாக அமைந்தால் நடிப்பேன்” என ஜானவி கபூர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தெலுங்கின் முன்னணி நட்சத்திர நடிகரும், ‘ஆர். ஆர். ஆர்’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களையும் கவர்ந்த நடிகர் ஜூனியர் என்டிஆர் கதையின் நாயகனாக நடிக்கும் பெயரிடப்படாத படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க நடிகை ஜானவி கபூர் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். முன்னணி இயக்குநர் கொரட்லா சிவா இயக்கத்தில் தயாராகும் இப்படத்தில் நடிகை ஜானவி கபூர் நடிப்பது உறுதி செய்யப்பட்டு, இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பை பிரத்யேக தோற்றத்துடன் படக்குழுவினர் வெளியிட்டிருக்கிறார்கள். இதன் மூலம் நடிகை ஜான்வி கபூர் முதன்முதலாக தெலுங்கு திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

இதனிடைய இந்த திரைப்படம் பான் இந்திய திரைப்படம் என்பதும், தெலுங்கைத் தவிர்த்து தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் வெளியாகும் என்பதும், நடிகை ஜானவி கபூர் இந்த படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கும் அறிமுகமாவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.