செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை நுவரெலியாவில் மண்மேடு சரிந்து வீழ்ந்து இருவர் மரணம்!

நுவரெலியாவில் மண்மேடு சரிந்து வீழ்ந்து இருவர் மரணம்!

0 minutes read

நுவரெலியா – வெதமன் வீதி பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இந்தச் சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது.

விருந்தகம் ஒன்றுக்கு மதில் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது.

இதையடுத்து, மண்ணில் புதையுண்ட இருவரும் குறித்த பகுதி மக்களால் மீட்கப்பட்டு நுவரெலியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட போதிலும் அவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் காலி – ஹில்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய குடும்பஸ்தரும், 25 வயதுடைய இளைஞருமே உயிரிழந்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.