செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை பொலிஸ்மா அதிபர் விவகாரம்: விக்கிரமரத்னவுக்கு மீண்டும் சேவை நீடிப்பு?

பொலிஸ்மா அதிபர் விவகாரம்: விக்கிரமரத்னவுக்கு மீண்டும் சேவை நீடிப்பு?

0 minutes read

பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்கிரமரத்னவுக்கு மேலும் மூன்று மாத காலத்துக்குச் சேவை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது என்று பொலிஸ் தலைமையகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, விக்கிரமரத்ன இன்று அல்லது நாளை பணிக்குச் சமூகமளிக்கவுள்ளதாக பொலிஸ் தலைமையகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவரை மேற்கோளிட்டு செய்தி வெளியாகியுள்ளது.

பொலிஸ்மா அதிபராக இருந்த விக்கிரமரத்ன கடந்த மார்ச் மாதம் 25ஆம் திகதி ஓய்வுபெறவிருந்த நிலையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மூன்று மாத காலத்துக்கு அவரின் சேவையை நீடித்தார். இந்தச் சேவை நீடிப்பு கடந்த ஜூன் மாதம் 25ஆம் திகதியுடன் முடிவடைந்தது.

பொலிஸ்மா அதிபர் ஒருவர் ஓய்வுபெறும்போது அவருக்குப் பொலிஸ் மரியாதை செலுத்தப்படும் எனவும், ஆனால் அவரது சேவை நீடிப்பு முடிந்த நாளில் அவருக்கு மரியாதை செலுத்தப்படவில்லை எனவும் பொலிஸ் தலைமையக வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

விக்கிரமரத்ன 2020 இல் பொலிஸ்மா அதிபர் பதவியை ஏற்றுக்கொண்டார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.