கனடாவில் ஆங்காங்கே ஏற்பட்டு வரும் காட்டு தீ காரணமாக கனடா மக்கள் கண் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றமை கண்டறியப்பட்டுள்ளது.
ஒன்றாரியோ, கியூபெக் மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியா போன்ற பகுதிகளில் தொடர்ச்சியாக காட்டுத் தீ தாக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனால் குறித்த பகுதி மக்களுக்கு பல்வேறு வகையிலான கண் நோய்கள் ஏற்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கண்களில் இரசாயனப் பதார்த்தங்கள் படுவதனால் பின்க் ஐ எனப்படும் கண் அழற்சி நோய் ஏற்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
காட்டுத் தீ காரணமாக வளி மாசடைவதாகவும் இதனால் கண்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும் வெளியில் நடமாடும் போது கண்களில் எரிச்சல் நிலை ஏற்பட்டால் அது குறித்து அதிக அவதானம் செலுத்தப்பட வேண்டுமெனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.