செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் பிரான்ஸ் வன்முறையால் ஐரோப்பிய நாடுகள் எச்சரிக்கை: தமிழர்களின் வர்த்தக நிலையங்களும் பாதிப்பு

பிரான்ஸ் வன்முறையால் ஐரோப்பிய நாடுகள் எச்சரிக்கை: தமிழர்களின் வர்த்தக நிலையங்களும் பாதிப்பு

1 minutes read

பொருட்களின் விலையேற்றம் மற்றும் பொதுச் சேவைகளின் வீழ்ச்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து பிரான்ஸ் முழுவதும் முன்னெடுக்கப்பட்ட அமைதியான ஆர்ப்பாட்டங்கள் கடந்த சனிக்கிழமை வன்முறையாக மாறியுள்ளன.

இதனைத் தொடர்ந்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் கலவரங்கள் மூண்டுள்ள நிலையில், அங்குள்ள பாதுகாப்புச் சூழலைக் கருத்தில்கொண்டு பிரான்சுக்குச் செல்லும் தத்தமது நாட்டுப் பிரஜைகளுக்குப் பல ஐரோப்பிய நாடுகள் தீவிர பயண எச்சரிக்கைகளை விடுத்துள்ளன.

நாட்டில் பரவியுள்ள கலவரங்களின்போது பல்வேறு வர்த்தக நிலையங்கள் சூறையாடப்பட்டு வியாபாரிகள் பாரிய நட்டங்களைச் சந்தித்துள்ளனர். இந்த வன்முறைச் சம்பவங்களில் பல ஈழத் தமிழர்களின் வர்த்தக நிலையங்களும் இலக்கு வைக்கப்பட்டுப் பாதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையிலேயே பிரான்சுக்கு பயணம் செய்யும் அல்லது அங்கு தங்கியுள்ள ஐரோப்பியப் பிரஜைகள் பாரிய மக்கள் கூட்டங்களைத் தவிர்ப்பதுடன், மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

இதனடிப்படையில், இத்தாலிய அரசாங்கம் தனது பிரஜைகள் அவசரத் தேவைகளுக்காகத் தங்களின் இருப்பிடத்தைக் கண்டறியும் வகையில் இணையத்தளம் அல்லது செயலி மூலம் தம்மைப் பதிவுசெய்து கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளதுடன், பொது இடங்களைத் தவிர்க்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.

எதிர்வரும் நாட்களில் மேலும் வன்முறைகள் வெடிப்பதற்கான சாத்தியக்கூறுகளை நிராகரிக்க முடியாது என ஜெர்மன் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளதுடன், உள்ளூர் பொலிஸாரின் பாதுகாப்பு அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும், அங்கீகரிக்கப்படாத ஆர்ப்பாட்டங்களிலிருந்து உடனடியாக வெளியேறுமாறும் எச்சரித்துள்ளது. தவறினால் சட்டரீதியான அபராதங்கள் அல்லது இழப்பீட்டுக் கோரிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் எனவும் ஜெர்மனி எச்சரித்துள்ளது.

இதேவேளை, பிரான்சில் பாதுகாப்பு நிலைமை வெகுவாகச் சீர்குலைந்துள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ள செக் குடியரசு வெளிவிவகார அமைச்சு, அந்நாட்டிலுள்ள செக் பிரஜைகள் பேரணிகள் மற்றும் பொதுக் கூட்டங்களைத் தவிர்க்குமாறு வலியுறுத்தியுள்ளதாக அந்நாட்டு சி.ரி.கே. செய்திச் சேவை குறிப்பிட்டுள்ளது.

ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறும் பகுதிகளைப் பயணிகள் முற்றாகத் தவிர்க்க வேண்டும் என போலந்து நாடும் தமது வழிகாட்டல் ஆலோசனையில் தெரிவித்துள்ளது.

நெதர்லாந்து அரசாங்கம் அக்டோபர் ஏழாம் திகதி வெளியிட்ட பயண வழிகாட்டல் திருத்தத்தில், போராட்டக் களங்களைத் தவிர்க்குமாறு டச்சுப் பிரஜைகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

அதேபோன்று டென்மார்க், சுவீடன், பின்லாந்து மற்றும் நோர்வே உள்ளிட்ட நோர்டிக் நாடுகளும் பிரான்சில் உள்ள தத்தமது குடிமக்கள் போராட்டங்களைத் தவிர்ப்பதுடன், உள்ளூர் பாதுகாப்பு அதிகாரிகளின் வழிகாட்டல்களைக் கட்டாயமாகப் பின்பற்றுமாறு அவசர ஆலோசனைகளை வெளியிட்டுள்ளன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.