செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home ஆசிரியர் தெரிவு பஸ் பயணத்தின்போது அதிக சத்தமாகப் பாடல் இசைப்பவர்களுக்கு 100 பவுண்ட் அபராதம்

பஸ் பயணத்தின்போது அதிக சத்தமாகப் பாடல் இசைப்பவர்களுக்கு 100 பவுண்ட் அபராதம்

1 minutes read

பொதுப் போக்குவரத்துச் சேவைகளில் ஏனைய பயணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் சமூக விரோதச் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில், பஸ்களில் அதிக சத்தமாகப் பாடல் இசைக்கும் பயணிகளுக்கு 100 பவுண்ட் வரை உடனடி அபராதம் விதிக்க இங்கிலாந்து அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

நாடு தழுவிய ரீதியில் பொதுப் போக்குவரத்து ஒழுங்குமுறைகளை இறுக்கமாக்கும் புதிய திட்டத்தின் கீழ் இங்கிலாந்தில் உள்ள பஸ் பயணிகளுக்கு இந்த நடைமுறை பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுப் போக்குவரத்துச் சாதனங்களில் அதிக சத்தத்துடன் ஒலிப்பதிவுகளை ஒலிக்கவிடுதல், குப்பைகளைக் கைவிடுதல், மின்னணு சிகரெட் பாவனை மற்றும் அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் நடந்துகொள்ளுதல் போன்ற செயற்பாடுகளைத் தடுப்பதே இந்த நடவடிக்கையின் பிரதான நோக்கமாகும்.

புதிய வழிகாட்டல்களின்படி, போக்குவரத்துச் செயலாளரின் இறுதி அனுமதியுடன் உள்ளூராட்சி அதிகார சபைகளுக்கு இந்த அபராதங்களை விதிப்பதற்கான விசேட அதிகாரங்கள் வழங்கப்படவுள்ளன.

எனினும், பஸ் சாரதிகள் இந்த அபராதங்களை நேரடியாக விதிக்க மாட்டார்கள் எனவும், போக்குவரத்துப் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் பொலிஸார் உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகளே இதனை நடைமுறைப்படுத்துவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பஸ்களுக்கான இந்த புதிய விதிமுறைகளுக்கு மேலதிகமாக, ரயில் பயணிகளுக்கான விழிப்புணர்வுப் பிரச்சாரமும் முன்னெடுக்கப்படவுள்ளது. ரயில்களில் அதிக சத்தமாகப் பாட்டுகள் இசைப்பது மற்றும் உரக்கப் பாடுவது தொடர்பில் ஏற்கனவே நடைமுறையிலுள்ள சட்டங்கள் குறித்து பயணிகளுக்கு நினைவூட்டப்படவுள்ளதுடன், இதனை மீறுபவர்களுக்கு 1,000 பவுண்ட் வரை அபராதம் விதிக்கப்படலாம் அல்லது அவர்கள் ரயிலில் இருந்து வெளியேற்றப்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

பொதுப் போக்குவரத்துகளில் இவ்வாறான இடையூறுகளுக்குப் பொதுமக்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்புகள் உள்ள போதிலும், இந்த புதிய நடைமுறைகளை களத்தில் எவ்வாறு வெற்றிகரமாக அமுல்படுத்துவது என்பது தொடர்பில் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.