0
கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நேற்று (20) நடைபெற்ற லங்கா பிரீமியர் லீக் தொடரின் இறுதிப் போட்டியை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேரில் கண்டுகளித்தார்.
இறுதிப் போட்டியைப் பார்வையிட வருகை தந்திருந்த உள்நாட்டு, வெளிநாட்டு பிரமுகர்களுடனும் ஜனாதிபதி கலந்துரையாடினார்.
அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, தேசிய பாதுகாப்பு தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க ஆகியோரும் போட்டியைக் கண்டுகளித்தனர்.