மீகவத்தை, நாரங்வல பிரதேசத்தில் அமைந்துள்ள பிரிவேனா ஒன்றில் இருந்த பிக்கு ஒருவர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
12 வயதுடைய பிக்குவே நேற்று இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மீகவத்தை பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பிரகாரம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பிரிவெனாவில் குறித்த பிக்கு இல்லாததால் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின்போது அவர் கிணற்றுக்குள் விழுந்து கிடந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.
எனினும், கிணற்றில் இருந்து உயிரிழந்த அவரின் சடலத்தையே மீட்க முடிந்தது என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மீகவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.