செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் அணு ஆயுத உற்பத்தியை வேகமாக அதிகரிக்க வேண்டும்: கிம் ஜாங்

அணு ஆயுத உற்பத்தியை வேகமாக அதிகரிக்க வேண்டும்: கிம் ஜாங்

0 minutes read

கடந்த இரு வாரங்களுக்கு முன் கிம் ஜாங் உன் ரஷிய சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அங்கு ராணுவ தளங்களை பார்வையிட்ட அவர் ஜனாதிபதி புதின் மற்றும் ராணுவ உயர் அதிகாரிகளை சந்தித்து பேசினார்.

இதனால் இரு நாடுகளிடையே ஆயுத ஒப்பந்தம் நடைபெற்று இருக்கலாம் என தென்கொரியா குற்றம்சாட்டியது.

இந்தநிலையில் வடகொரியாவில் பாராளுமன்றம் கூடியபோது, அங்கு கிம் ஜாங் உன் கலந்து கொண்டு பேசினார்.

அதன்போது, `உலகம் புதியதொரு பனிப்போரில் நுழைகிறது. இதில் அமெரிக்காவை எதிர்கொள்ளும் கூட்டணியில் வடகொரியா முக்கிய பங்கை வகிக்க வேண்டும். எனவே அணு ஆயுத உற்பத்தியை அதிகரிப்பது காலத்தின் கட்டாயம் என கூறினார்.

இதனையடுத்து, அங்கு மேலும் போர்ப்பதற்றம் அதிகரித்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.