செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் அமெரிக்காவின் விமர்சனங்களுக்கு பிரான்ஸ் அரசு கண்டனம்: துப்பாக்கிச் சூட்டு புள்ளிவிவரங்களுடன் பதிலடி

அமெரிக்காவின் விமர்சனங்களுக்கு பிரான்ஸ் அரசு கண்டனம்: துப்பாக்கிச் சூட்டு புள்ளிவிவரங்களுடன் பதிலடி

1 minutes read

பிரான்ஸில் தற்போது இடம்பெற்றுவரும் கலவரங்கள் குறித்து அமெரிக்கா முன்வைத்த விமர்சனங்களுக்கு, பிரான்ஸ் வெளியுறவு அமைச்சு உத்தியோகபூர்வமாகப் பதிலடி கொடுத்துள்ளது. அதேவேளை, அமெரிக்காவின் இவ்வாறான கருத்துகளை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், அவை முட்டாள்தனமானவை எனவும் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் கடுமையான கண்டனம் வெளியிட்டுள்ளார்.

பிரான்ஸில் தீவிரமடைந்து வரும் வன்முறைக் கலவரங்களுக்கு குடியேற்றவாசிகளே பிரதான காரணம் எனவும், அந்நாடு விரைவில் ஒரு முஸ்லிம் நாடாக மாறும் எனவும் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்னதாக விமர்சித்திருந்தார்.

தொடர்புடைய செய்தி – குடியேற்றத்தை கட்டுப்படுத்தாவிடின் பாரிஸ் முஸ்லிம் நகரமாக மாறிவிடும்: ட்ரம்ப்பின் கருத்து சர்ச்சை!

இதனிடையே, பிரான்ஸில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களின் போது முகமூடி அணிந்த நபர்கள் பாரிய தீக்கு முன்னால் நிற்கும் வீடியோ ஒன்றை அமெரிக்காவின் குடிவரவு மற்றும் சுங்க அமுலாக்கல் பிரிவான ICE அமைப்பு தனது உத்தியோகபூர்வ பக்கத்தில் பகிர்ந்திருந்தது. அத்துடன், அமெரிக்கத் தெருக்கள் இதுபோன்று காட்சியளிப்பதைத் தடுப்பதற்காகவே தாம் நாளாந்தம் போராடி வருவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அமெரிக்க அதிகாரிகளின் இந்த சர்ச்சைக்குரிய பதிவுகளுக்கு உடனடியாகப் பதிலடி கொடுத்துள்ள பிரான்ஸ் வெளியுறவு அமைச்சு, அமெரிக்காவில் பதிவாகும் துப்பாக்கிச் சூட்டு மரணங்கள் தொடர்பான உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது.

அத்துடன், தமது நாட்டின் புள்ளிவிவரங்கள் இதுபோன்று மோசமாக மாறுவதைத் தடுப்பதற்காகவே பிரான்ஸ் நாளாந்தம் போராடி வருவதாகத் தெரிவித்து, அமெரிக்காவின் குற்றச்சாட்டுக்குத் தனது பலமான எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.