செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இந்திய நிதி அமைச்சர் திருமலைக்கு விஜயம்!

இந்திய நிதி அமைச்சர் திருமலைக்கு விஜயம்!

1 minutes read
இலங்கை வந்துள்ள இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமானின் அழைப்பின் பேரில் கிழக்கு மாகாணத்துக்கும் இன்று விஜயம் செய்தார்.

திருகோணமலை விமான தளத்தில் ஹெலிகொப்டரில் வந்திறங்கிய நிர்மலா சீதாராமனை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், பிரதம செயலாளர் ஆர்.எம்.பி.எஸ்.ரத்நாயக்க, ஆளுநரின் செயலாளர் எல்.பி. மதநாயக்க, ஆளுநரின் பிரத்தியேக செயலாளர் எல்.எல். அனில் விஜயஶ்ரீ, மாவட்ட  அரச அதிபர் சாமிந்த ஹெட்டியாய்ச்சி மற்றும் கிழக்கு மாகாண சுற்றுலாப் பணியகத்தின் தவிசாளர் ஏ.பி.மதனவாசன் ஆகியோர் வரவேற்றனர்.

நாளை திருகோணமலையில் இந்திய வங்கிக் கிளை ஒன்றைத் திறந்து வைக்கும் இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், நாளை காலை திருக்கோணேஸ்வரம் கோயிலில் வழிபாடு செய்ய்வார்.

அதன் பின்னர் ஹெலிகொப்டரில் கொழும்பு புறப்படும் அவர் மதியம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்த்தன ஆகியோரைச் சந்திப்பார்.

நாளை மாலையில் இ.தொ.கா. நடத்தும் ‘மலையகம் – 200’ நிகழ்வில் அவர் பங்குபற்றுவார்.

நாளைமறுதினம் காலையில் கொழும்பிலிருந்து ஹெலிகொப்டரில் வடக்கே புறப்படும் அவர் யாழ்ப்பாணம் நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு பலாலியில் இருந்து விமானம் மூலம் சென்னை திரும்புவார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.