செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கிளிநொச்சியில் சீரற்ற வானிலையால் 394 குடும்பங்களைச் சேர்ந்த 1,234 பேர் பாதிப்பு

கிளிநொச்சியில் சீரற்ற வானிலையால் 394 குடும்பங்களைச் சேர்ந்த 1,234 பேர் பாதிப்பு

0 minutes read

நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக பெய்த கடும் மழையால் கிளிநொச்சி மாவட்டத்தில் இன்று வெள்ளிக்கிழமை  (15) நண்பகல்  வரை 394 குடும்பங்களை சேர்ந்த 1,234 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம்தெரிவித்துள்ளது.

கிளிநொச்சி கரைச்சி, கண்டாவளை பிரதேச செயலக பிரிவுகளைச் சேர்ந்த மக்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.  கரைச்சி பிரதேச செயலக பிரிவில் மாயவனூர், மருதநகர், மாவடியம்மன் கிராமங்களும், கணடாவளை பிரதேச செயலக பிரிவுகளில் பெரியகுளம், பிரமந்தனாறு, தர்மபுரம் கிழக்கு, தர்மபுரம் மேற்கு புண்ணைநீராவி, குமாராசாமிபுரம், புளியம்பொக்கனை கிராமங்களும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.

இந்த பாதிப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.