ஜெர்மனியின் சொலிங்ஜென் நகரம் உருவாகி 650 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில் நேற்று இரவு நடைபெற்ற நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.
அப்போது, அங்கு திடீரென நடத்தப்பட்ட கத்திக்குத்து தாக்குதல் சம்பவத்தில் 2 ஆண்கள் (56, 67) மற்றும் ஒரு பெண் (56) என மொத்தம் 3 பேர் பலியாகி உள்ளனர்.
இந்த கத்திக்குத்து தாக்குதலில் 8 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து வந்த பொலிஸார் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அத்துடன், கத்திக்குத்து தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடிய நபரை தேடி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த கத்திக்குத்து தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
பாலஸ்தீனம் மற்றும் உலகின் பிற பகுதிகளில் இஸ்லாமியர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலுக்கு பழிவாங்கவே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறியுள்ளது.