செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலண்டன் லெபனானில் உள்ள குடிமக்களுக்கு இங்கிலாந்து எச்சரிக்கை

லெபனானில் உள்ள குடிமக்களுக்கு இங்கிலாந்து எச்சரிக்கை

0 minutes read

லெபனானில் வசிக்கும் தங்களது குடிமக்கள் விரைவில் அந்நாட்டை விட்டு வெளியேறுமாரு இங்கிலாந்து அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.

லெபனான் மற்றும் இஸ்ரேல் இடையே போர் பதற்றம் தீவிரம் அடைந்துள்ளதை அடுத்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஏவுகணை மற்றும் வான்வழி தாக்குதல்கள் காரணமாக பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதுடன், விரைவில் இந்த நிலை மோசமடையக்கூடும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில், “மோதல் தீவிரமானால், நாங்கள் அனைவரையும் உடனடியாக வெளியேற்ற முடியாமல் போகும் இக்கட்டான சூழல் உருவாகலாம்.

அந்த சமயத்தில் அரசு சார்பில் நாங்கள் எந்த உத்தரவாதமும் அளிக்க முடியாது. நிலைமை மோசமானால், மக்கள் பாதுகாப்பு முகாம்களுக்கு செல்ல வலியுறுத்தப்படலாம்.

இதனால் லெபனானில் உள்ள இங்கிலாந்து குடிமக்கள் அங்கிருந்து வெளியேறிவிடுங்கள்” என்று இங்கிலாந்து வெளியுறவுத் துறை செயலாளர் டேவிட் லேமி கூறியுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More