செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் பிரதமர்! (படங்கள் இணைப்பு)

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் பிரதமர்! (படங்கள் இணைப்பு)

0 minutes read

யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு இன்று காலை வருகை தந்த பிரதமர் ஹரிணி அமரசூரிய, யாழ். இந்துக் கல்லூரிக்கு விஜயம் செய்து கல்லூரி அதிபர் மற்றும் மாணவர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

கல்லூரி விளையாட்டு மைதானத்தில் விளையாட்டில் ஈடுபட்டிருந்த மாணவர்களிடம் கலந்துரையாடிய பிரதமர் தேவைகளைக் கேட்டறிந்து கொண்டார்.

கல்லூரி அருங்காட்சியகம், மாணவர்களின் இணைப்பாட விதான செயற்பாடுகளையும் பார்வையிட்டார்.

இதன்போது கல்லூரி மண்டபத்தில் பிரதமர் உரையாற்றியதுடன் பிரதமருக்கு பாடசாலை அதிபரால் நினைவுப் பரிசு ஒன்றும் கையளிக்கப்பட்டது.

இதன்போது கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், நாடாளுமன்ற உறுப்பினர்களான கருணைநாதன் இளங்குமரன், றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி மற்றும் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.