செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா ஜின்- தி பெட் – திரைப்பட விமர்சனம்

ஜின்- தி பெட் – திரைப்பட விமர்சனம்

2 minutes read

ஜின்-  தி பெட் – திரைப்பட விமர்சனம்

தயாரிப்பு : ஃபேரிடேல் பிக்சர்ஸ்

நடிகர்கள்: முகேன் ராவ், பவ்யா தரிகா, டத்தோ ராதா ரவி , வடிவுக்கரசி , நிழல்கள் ரவி, பால சரவணன் , வினோதினி வைத்தியநாதன், ஜார்ஜ் விஜய் , இமான் அண்ணாச்சி ,ரித்விக் மற்றும் பலர்

இயக்கம் : டி ஆர் பாலா

மதிப்பீடு: 2.5/5

மூன்று வயது முதல் முதுமையில் உள்ளவர்கள் வரை ரசிக்கும் வகையில் இந்த படம் உருவாகி இருப்பதாக வெளியீட்டிற்கு முன் படக்குழுவினர் விளம்பரப்படுத்தி இருந்தனர்.

இதனை நம்பி பட மாளிகைக்கு சென்று படத்தை பார்த்தவர்களுக்கு  ‘ஜின் – தி பெட் ‘திருப்தி அளித்ததா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம்.

மலேசியாவில் மதுபான கூடங்களில் மது அருந்த வரும் வாடிக்கையாளர்களுக்கு உற்சாகம் தரும் வகையில் பாடும் இசை கலைஞரான சக்தி ( முகேன் ராவ்) ஒப்பந்தம் நிறைவடைந்த உடன் தாயகம் திரும்புகிறார்.

திரும்பும்போது நண்பர்கள் – குடும்ப உறுப்பினர்கள் – உறவினர்களின் வேண்டுகோளுக்கு ஏற்ப பரிசு பொருளை தருவதற்காக பழமையான பொருட்கள் விற்பனை செய்யும் நிலையத்திற்கு செல்கிறார் .‌

அங்கு கடந்த நூற்றாண்டுகளில் மன்னர்களுக்கு பாதுகாப்பு சேவையை வழங்கிய ஜின் எனும் ஒரு அமானுஷ்ய உயிரினத்தை – அதன் அசலான தன்மையை புரியாமல் – பரிசு பொருளாக வாங்கி கொண்டு தாயகம் திரும்புகிறார்.

அந்த ஜின் எனப்படும் அமானுஷ்ய உயிரினம் – சக்தியின் கைகளுக்கு கிடைத்த பிறகு அவருடைய வாழ்க்கையில் பல நல்ல விடயங்கள் நடைபெறுகிறது.

அவர் நினைத்ததெல்லாம் நடப்பதால் மகிழ்ச்சி அடையும் சக்தி அதனை போற்றி பாதுகாக்க தொடங்குகிறார். ஆனால் அந்த ஜின் எனும் அமானுஷ்ய உயிரினத்தை பார்த்தால்..‌அவருடைய குடும்ப உறுப்பினர்களுக்கு பிடிக்கவில்லை.

அதனால் குழப்பங்களும் , பாதிப்புகளும் ஏற்படுகிறது. அதிலும் தான் காதலித்து திருமணம் செய்து கொண்ட மனைவி பாதிக்கப்படும்போது சக்தி- ஜின்னை விட்டு பிரிகிறார்.  அதன் பிறகு என்ன நடைபெறுகிறது?  என்பதுதான் இப்படத்தின் கதை.

படத்தின் பிரதான அம்சம் ஜின் எனும் ஒரு அமானுஷ்ய உயிரினம் தான். இதற்காக பார்வையாளர்களுக்கு வழங்கப்படும் முன்னோட்டம்  ரசனையுடன் இருக்கிறது.

அத்துடன் பெரும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்துகிறது. ஆனால் கிறாபிக்ஸில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் ஜின் யாரையும் பெரிதாக கவரவில்லை.

உற்சாகமான வித்தியாசமான பரபரப்பான திரைக்கதைக்கு பதிலாக .. வழக்கமான பார்த்து பார்த்து சலித்து போல திரைக்கதையால் ரசிகர்களுக்கு சோர்வுதான் ஏற்படுகிறது.

கதையின் நாயகனான சக்தி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் முகேன் ராவ்வின் புன்னகை அழகு. ஆனால் கவர்ந்திழுக்கும் சிரிப்பு மட்டும் போதுமா..!?.

கதையின் நாயகியாக பிரியா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகை பவ்யா தரிகா வழக்கமான தமிழ் சினிமாவின் ஹீரோயின் போல் நாயகனை காதலிக்கிறார். பாட்டு பாடுகிறார்.

அதன் பின் உச்சக்கட்ட  காட்சியில் தோன்றுகிறார். நடிப்பதற்கான வாய்ப்பு குறைவு என்றாலும்.. தன்னால் முடிந்த அளவு நடித்திருக்கிறார்.

ரசிகர்களை சிரிக்க வைப்பதில் பால சரவணன் ஓரளவு வெற்றி பெறுகிறார்.

ஒளிப்பதிவு, பின்னணி இசை ரசிகர்களுக்கு ஆறுதல்.‌

ஜின் எனும் அமானுஷ்ய உயிரினத்தை அற்புதமாக விவரித்து.. ரசிகர்களை வியக்க வைத்து வெற்றி பெற வேண்டிய இயக்குநர் … தன் கடமையை முழுமையாக நிறைவேற்றாததால் ரசிகர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த திருப்தி கிடைக்கவில்லை.

ஜின் தி பெட் –  வளர்க்க விரும்பாத செல்லப்பிராணி.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.