செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் கால்பந்து போட்டிக்காக வீரர்கள் சென்ற பஸ் ஆற்றில் கவிழ்ந்தது | பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வுகால்பந்து போட்டிக்காக வீரர்கள் சென்ற பஸ் ஆற்றில் கவிழ்ந்தது | பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு

கால்பந்து போட்டிக்காக வீரர்கள் சென்ற பஸ் ஆற்றில் கவிழ்ந்தது | பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வுகால்பந்து போட்டிக்காக வீரர்கள் சென்ற பஸ் ஆற்றில் கவிழ்ந்தது | பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு

0 minutes read

மெக்சிகோவின் கிழக்கு மாநிலமான வெராகிரஸ்சில் உள்ளூர் கால்பந்து போட்டிக்காக அமெச்சூர் கிளப்பை சேர்ந்த வீரர்கள் மற்றும் ரசிகர்களை ஏற்றிக்கொண்டு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பஸ் அடோயாக் பகுதியில் உள்ள ஆற்றுப்பாலத்தில் சென்று கொண்டிருந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து திடீரென ஆற்றில் கவிழ்ந்தது.இதில் பஸ் முழுவதுமாக உடைந்து சேதமடைந்தது. இந்த கோர விபத்தில் குழந்தைகள் உள்பட 16 பேர் உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. மேலும் படுகாயமடைந்த 10-க்கும் மேற்பட்டோர் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்து குறித்து நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், பஸ் அதிவேகமாக சென்றதே விபத்துக்கு காரணம் என தெரிய வந்துள்ளது. இது குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இந்த விபத்தால் வெராகிரஸ் மாநிலத்தில் விளையாட்டு வீரர்கள் மத்தியில் சோகம் ஏற்பட்டு உள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.