செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் ஐ.எஸ். அமைப்பை வேரோடு அழிப்போம் | இராக் பிரதமர் ஹைதர் அல்-அபாதிஐ.எஸ். அமைப்பை வேரோடு அழிப்போம் | இராக் பிரதமர் ஹைதர் அல்-அபாதி

ஐ.எஸ். அமைப்பை வேரோடு அழிப்போம் | இராக் பிரதமர் ஹைதர் அல்-அபாதிஐ.எஸ். அமைப்பை வேரோடு அழிப்போம் | இராக் பிரதமர் ஹைதர் அல்-அபாதி

1 minutes read

இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாத அமைப்பை வேரோடு அழிப்போம் என்று இராக் பிரதமர் ஹைதர் அல்-அபாதி சூளுரைத்தார்.
இராக் தலைநகர் பாக்தாதில் உள்ள ஜாவ்ஹரா வணிக வளாகத்தில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் திங்கள்கிழமை தாக்குதல் நிகழ்த்தினர்.
கார் வெடிகுண்டுத் தாக்குதல், அதைத் தொடர்ந்து நிகழ்த்திய துப்பாக்கித் தாக்குதலில் பலி எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை 18-ஆக அதிகரித்தது. குண்டு வெடிப்பு நிகழ்ந்த இடத்தை செவ்வாய்க்கிழமை பார்வையிட்ட அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ரமாடி நகரம் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் பிடியிலிருந்து அண்மையில் மீட்கப்பட்டது. இது பயங்கரவாதிகளை நிலைகுலையச் செய்துள்ளது.
அந்தப் பின்னடைவுக்குப் பிறகு ஏதாவது செய்தாக வேண்டும் என்ற கொடூரமான எண்ணத்தில் உதித்த தாக்குதல் பாக்தாதில் நிகழ்த்தப்பட்டது. பயங்கரவாதிகளை எதிர்கொள்ள இராக் பாதுகாப்புப் படையினர் தயாராக உள்ளனர்.
பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்திய இடங்களில் நாட்டின் பாதுகாப்புப் படையினர் நிகழ்த்தி வரும் இடையறாத தாக்குதல்களால் நாளுக்கு நாள் பயங்கரவாதிகள் பெரும் தோல்விகளை சந்தித்து வருகின்றனர். பின்னடைவுகளை ஏற்க முடியாமல், அவர்கள் கோழைத்தனமான தாக்குதல்களைக் கட்டவிழ்த்துவிடுகின்றனர்.
அவர்களுடைய திட்டங்களும் நோக்கங்களும் நிறைவேறவிட மாட்டோம். இஸ்லாமிய தேச பயங்கரவாதிகளை இராக்கில் வேரோடு அழிப்போம் என்று ஹைதர் அல்-அபாதி கூறினார்.
முன்னதாக, திங்கள்கிழமை பாக்தாதின் ஜாவ்ஹாரா வணிக வளாக வாசலில் பயங்கரவாதி ஓட்டி வந்த காரில் பொருத்திய சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது.
அதைத் தொடர்ந்து, அப்பகுதியில் மறைந்திருந்த 3 பயங்கரவாதிகள் துப்பாக்கியால் பொதுமக்களை நோக்கி சரமாரியாக சுடத் தொடங்கினர்.
இந்த இரட்டைத் தாக்குதலில் 18 பேர் உயிரிழந்தனர். 30-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர். அங்கு சுமார் 75 பேரை பிணைக் கைதிகளாக பயங்கரவாதிகள் பிடித்து வைத்தனர் என்று கூறப்பட்டதை ராணுவத்தினர் மறுத்தனர்.
அந்த இடத்தில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக கடுமையான துப்பாக்கிச் சண்டை நிகழ்ந்தது.
துப்பாக்கிச் சண்டையில் பயங்கரவாதிகள் அனைவரும் கொல்லப்பட்டதாக ராணுவ உயரதிகாரி தெரிவித்தார். அந்த வணிக வளாகத்துக்குள் சிக்கியிருந்த பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
தாக்குதலில் காயமடைந்தோருக்கு அருகில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.