19
தென் கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான இந்தோனேஷியாவில், நேற்று பூகம்பம் ஏற்பட்டது. ‘ரிக்டர்’ அளவில், 6.4 ஆக பதிவான போதும், சேதம் எதுவும் ஏற்படவில்லை; இதனால், ‘சுனாமி’ பாதிப்பும் ஏற்படவில்லை.வழக்கமாக, பூகம்ப பாதிப்பு, 6 ரிக்டர் அளவுக்கு மேல் இருந்தால், இந்தோனேஷியாவில், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படும். எனினும், இந்த முறை அவ்வாறு எச்சரிக்கை விடப்படவில்லை.