செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் நோய்வாய்ப்பட்டார் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தனியாகு!

நோய்வாய்ப்பட்டார் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தனியாகு!

0 minutes read

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தனியாகு (வயது 75) திடீர் நோய்வாய்ப்பட்டுள்ளார் என அந்நாட்டு பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.

அவர் 3 நாட்கள் வீட்டில் இருந்தபடியே அலுவலக பணிகளைக் கவனிப்பார் என்றும் பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தனியாகு, வயிற்றுக்கோளாறு போன்ற உடல் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

அத்துடன், அவரின் உடலில் போதிய நீரின்மை காரணமாக ஊசி வழி நீர் செலுத்தப்படுவதாகவும் பிரதமர் அலுவலகத்தின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

அதேவேளை, பெஞ்சமின் நெத்தனியாகுக்கு கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் இதயத் துடிப்பைச் சீர்செய்யும் pacemaker என்ற கருவி பொருத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பெஞ்சமின் நெத்தனியாகுவே இஸ்ரேலில் பிறந்த முதலாவது இஸ்ரேலியப் பிரதமர் ஆவார். இவர் தற்போது உட்பட 5 முறை இஸ்ரேலிய பிரதமராக உள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.