கனடாவின் Grand Valley Institution of Women சிறைச்சாலையில் இருந்து தப்பியோடிய 59 வயது பெண் சிறைக்கைதி மீண்டும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இந்தத் தகவலை, கனடா சிறைச்சாலைகள் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.
கைதிகள் குறித்து மேற்கொள்ளப்படும் வழமையான கணக்கெடுப்பின் போதே, கடந்த ஞாயிற்றுக்கிழமை (31) மேற்படி பெண் கைதியைக் காணவில்லை என்பது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையில், திங்கட்கிழமை பிற்பகல் 3:30 மணிக்கு முன்பு அவர் கைது செய்யப்பட்டதை வாட்டர்லூ பிராந்திய காவல்துறை உறுதிப்படுத்தியது.
$5,000 க்கும் அதிகமான மோசடிக்காக மேற்படி பெண் கைதி தற்போது ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார்.