கனடா – ஒன்றாரியோ மாகாண மேயர் டக் போர்ட், ஊடகவியலாளர்கள் முன்னிலையில் மதுபானத்தை கீழே ஊற்றி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
“பிறவுன் றோயல் விஷ்கி” என்ற மதுபான உற்பத்தி நிறுவனத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக இவர் இவ்வாறு செய்துள்ளார்.
குறித்த நிறுவனத்தின் மதுபான போத்தலில் இருந்த மதுவை கீழே ஊற்றிய மேயர், கனடாவில் மதுபானம் உற்பத்தி செய்யப்படும் நிறுவனங்களுக்கு ஆதரவை வெளிப்படுத்துவதாகவும் கூறினார்.
“பிறவுன் றோயல் விஷ்கி” மதுபான உற்பத்தி நிறுவனம், ஒன்றாரியோ மாகாணத்தில் காணப்பட்ட தனது உற்பத்தி நிலையத்தை அமெரிக்காவிற்கு மாற்றத் தீர்மானித்துள்ளது.
எனினும், இந்த உற்பத்தி நிலையம் மூடப்படுவதால் ஒன்றாரியோ மாகாணத்தில் பெருமளவு தொழில் வாய்ப்புகள் இழக்கப்படும் என அஞ்சப்படுகின்றது.
எனவே, அந்த நிறுவனத்திற்கு எதிர்ப்பை வெளியிடும் நோக்கிலேயே நிறுவனத்தின் மதுபான போத்தலின் இருந்த மதுபானத்தை கீழே ஊற்றி ஒன்றாரியோ மாகாண மேயர் டக் போர்ட் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.