செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home ஆசிரியர் தெரிவு இங்கிலாந்தின் 59ஆவது பிரதமராக ஆண்டி பர்ன்ஹாம் நியமனம்: மன்னர் சார்லஸைச் சந்தித்தார்

இங்கிலாந்தின் 59ஆவது பிரதமராக ஆண்டி பர்ன்ஹாம் நியமனம்: மன்னர் சார்லஸைச் சந்தித்தார்

1 minutes read

இங்கிலாந்தின் புதிய பிரதமராக லேபர் கட்சியின் தலைவர் ஆண்டி பர்ன்ஹாம் (Andy Burnham) இன்று திங்கட்கிழமை (20) உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார். பக்கிங்ஹாம் அரண்மனையில் மன்னர் சார்லஸை சந்தித்த பர்ன்ஹாம், புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான மன்னரின் அழைப்பை ஏற்றுக்கொண்டார்.

முன்னதாக, கீயர் ஸ்டார்மர் (Keir Starmer) தனது பிரதமர் பதவியை முறைப்படி ராஜினாமா செய்தார். அரண்மனையின் ‘சீன உணவருந்தும் அறையில்’ (Chinese Dining Room) மன்னரைச் சந்தித்த ஸ்டார்மர், தனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்தார். அதனை மன்னர் ஏற்றுக்கொண்டார்.

ஸ்டார்மரின் வெளியேற்றத்தைத் தொடர்ந்து, இங்கிலாந்தில் தற்போது 09 முன்னாள் பிரதமர்கள் உயிருடன் உள்ளனர், இது ஒரு புதிய சாதனையாகும்.

கடந்த நான்கு ஆண்டுகளில் இங்கிலாந்தின் பிரதமராகப் பொறுப்பேற்கும் ஐந்தாவது நபர் ஆண்டி பர்ன்ஹாம் ஆவார்.

அரண்மனை அறிக்கையின்படி, பர்ன்ஹாம் மன்னரைச் சந்தித்து “கரம் முத்தி” (kissed hands) தனது நியமனத்தை உறுதிப்படுத்தினார்.

கடந்த வெள்ளிக்கிழமை லேபர் கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்ற பர்ன்ஹாம், வருமான வரி குறைப்பு உள்ளிட்ட புதிய பொருளாதாரக் கொள்கைகளைச் செயல்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரண்மனையிலிருந்து வெளியேறிய பிரதமர் பர்ன்ஹாம், டவுனிங் வீதிக்குச் சென்று நாட்டின் புதிய பிரதமராகத் தனது முதல் உரையை நிகழ்த்தவுள்ளார்.

அரண்மனையில் நடைபெற்று வரும் புனரமைப்புப் பணிகள் காரணமாக, இந்தச் சந்திப்புகள் வழக்கமான இடத்துக்குப் பதிலாக ‘சீன உணவருந்தும் அறையில்’ நடைபெற்றன என்பதும், தலைவர்கள் ‘லக்கேஜ் கதவு’ (luggage door) வழியாக உள்ளே சென்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.