தமிழ் சினிமாவில் தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி, ரசிகர்களிடம் ‘திறமையான நடிகை’ என்ற நற்பெயரை சம்பாதித்திருக்கும் நடிகை கௌரி கிஷன் கதையின் நாயகியாக அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் ‘தாரகை’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் கிரீஷ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தாரகை’ திரைப்படத்தில் கௌரி கிஷன், காளி வெங்கட், ஸ்ரீமன் ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.
சுந்தர் சுகுமாரன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சித்து குமார் இசையமைத்திருக்கிறார். கதையின் நாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து எமோஷனல் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஸ்பீடு ரீல்ஸ் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்திருக்கிறது.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ”ஒவ்வொரு பெண்களின் வாழ்க்கையும் அவர்கள் எதிர்கொள்ளும் கடினமான சூழல்களை உணர்வுபூர்வமான படைப்பாக உருவாக்கப்பட்டுள்ளன.
இந்த கதை- பெண்களின் வாழ்க்கை பயணத்தை அதன் எதார்த்தத்துடன் விவரிக்கிறது” என்றார்.
தற்போது வெளியிடப்பட்டிருக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் கதையின் நாயகியான கௌரி கிருஷ்ணனின் தோற்றமும்… அவரைச் சுற்றி பல வயதுள்ள பெண்கள் இடம் பிடித்திருப்பதும்… படத்தை பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ளும் ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கிறது.