செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்அமெரிக்கா வருமான வீழ்ச்சி: சுமார் 1000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய Netflix நிறுவனம் தீர்மானம்

வருமான வீழ்ச்சி: சுமார் 1000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய Netflix நிறுவனம் தீர்மானம்

1 minutes read

முன்னணி இணைய ஒளிபரப்புச் சேவை நிறுவனமான நெற்ஃபிளிக்ஸ் (Netflix), சுமார் 1,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. உலகளாவிய ரீதியில் இந்நிறுவனத்தில் சுமார் 16,000 ஊழியர்கள் பணியாற்றி வரும் நிலையில், இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

நிறுவனத்தின் வருமான வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள மந்தநிலையே இந்தத் தீர்மானத்துக்குப் பிரதான காரணமாகக் கூறப்படுகின்றது. மேலும், நெற்ஃபிளிக்ஸ் தளத்தில் உள்ள வீடியோக்களைப் பார்வையிடுவோரின் எண்ணிக்கையும் கணிசமாகக் குறைவடைந்து வருவதாகக் குறிப்பிடப்படுகின்றது. குறிப்பாக, முதலாம் காலாண்டுடன் ஒப்பிடுகையில் இரண்டாம் காலாண்டில் நிறுவனத்தின் வருமான வளர்ச்சியானது மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.

அமெரிக்காவைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் இந்நிறுவனம், 1997ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டது. ஆரம்பக் காலகட்டத்தில் வீடுகளுக்கு டிவிடி (DVD) தட்டுகளை வாடகைக்கு வழங்கும் நிறுவனமாகவே இது தனது சேவையை முன்னெடுத்திருந்தது.

அதனைத் தொடர்ந்து, 2007ஆம் ஆண்டு தனது நவீன இணைய ஒளிபரப்புச் சேவையை (Streaming Service) நெற்ஃபிளிக்ஸ் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்தது. சர்வதேச ரீதியில் பெரும் வரவேற்பைப் பெற்ற இந்நிறுவனத்தின் தற்போதைய சந்தைப் பெறுமதியானது சுமார் 58 பில்லியன் அமெரிக்க டொலர்களாகக் கணக்கிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.