செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா தனுஷ் வெளியிட்ட ஜீ.வி. பிரகாஷ் குமாரின் ‘இம்மோர்டல்’ முன்னோட்டம்

தனுஷ் வெளியிட்ட ஜீ.வி. பிரகாஷ் குமாரின் ‘இம்மோர்டல்’ முன்னோட்டம்

1 minutes read

இசையமைப்பாளராகவும்…. நட்சத்திர நடிகராகவும்… வெற்றிகரமாக தமிழ்த் திரையுலகில் பயணித்து வரும் தேசிய விருது பெற்ற கலைஞரான ஜீ. வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘இம்மோர்டல்’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.

இதனை தேசிய விருது பெற்ற சர்வதேச நட்சத்திர நடிகரான தனுஷ் -அவருடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்ட, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

இயக்குநர் மாரியப்பன் சின்ன இயக்கத்தில் தயாராகியுள்ள ‘இம்மோர்டல்’ திரைப்படத்தில் ஜீ வி பிரகாஷ் குமார், கயாடு லோஹர்,டி.எம். கார்த்திக், குமார் நடராஜன், மாறன், ‘ஆதித்யா’ கதிர், ‘அரசு’ மகாராஜன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாம் சி எஸ் இசையமைத்திருக்கிறார். திகில் திரைப்படமாக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஏகே ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அருண்குமார் தனசேகரன் தயாரித்திருக்கிறார்.

எதிர்வரும் செப்டம்பர் மாதம் நான்காம் திகதி முதல் உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.

இதில் ஜீ.வி. பிரகாஷ் குமார் மற்றும் கயாடு லோஹரின் இளமை சார்ந்த காதல் சில்மிஷங்கள்.. ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. அத்துடன் அமானுஷ்ய காட்சிகளும் இடம் பிடித்திருப்பதால்… படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.