பான் இந்திய நட்சத்திர நடிகரான நாகார்ஜுனா கதையின் நாயகனாக நடிக்கும் ‘கிங் 100’ திரைப்படத்தினை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தும் வகையில் பிரத்யேக காணொளியை படக் குழுவினர் நாகார்ஜுனாவின் பிறந்தநாளன்று வெளியிட்டுள்ளனர்.
இயக்குநர் ர. கார்த்திக் இயக்கத்தில் உருவாகி வரும் ‘கிங் 100’ திரைப்படத்தில் நாகார்ஜுனா முதன்மையான வேடத்தில் நடித்திருக்கிறார். இந்த திரைப்படம் – திரை உலக பயணத்தில் அவர் நடிக்கும் நூறாவது திரைப்படம் என்பது கவனிக்கத்தக்கது. இந்தப் படத்திற்கு ராஜா மகாதேவன் ஒளிப்பதிவு செய்ய தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். எக்சன் என்டர்டெய்னராக தயாராகி வரும் இந்த திரைப்படத்தை அன்னபூர்ணா ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
நாகார்ஜுனாவின் பிறந்தநாளை அவருடைய ரசிகர்கள் கொண்டாடுவதற்கு ஏற்ப நடிப்பில் தயாராகி வரும் ‘கிங் 100’ திரைப்படத்தின் அறிமுக காணொளியை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இதில் இடம் பிடித்திருக்கும் காட்சிகள் அனைத்தும் நாகார்ஜுனாவின் ரசிகர்களை மட்டுமல்லாமல் அனைத்தும் திரை ஆர்வலர்களையும் வெகுவாக கவர்ந்திருப்பதால்… இந்த பிரத்யேக அறிமுக காணொளி மில்லியன் கணக்கிலான டிஜிட்டல் பார்வைகளை பெற்று சாதனை படைத்து வருகிறது.