செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா ஜீ 5 டிஜிட்டல் தளத்தில் வெளியாகும் ‘சட்டமும் நீதியும் : சீசன் 2’

ஜீ 5 டிஜிட்டல் தளத்தில் வெளியாகும் ‘சட்டமும் நீதியும் : சீசன் 2’

1 minutes read

தமிழ் சினிமாவின் ஒப்பற்ற குணச்சித்திர நடிகரான சரவணன் மற்றும் வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் இணைந்து தோன்றும் ‘சட்டமும் நீதியும்’ இணைய தொடரின் இரண்டாவது பாகம் எதிர்வரும் 23ஆம் திகதி முதல் ஜீ 5 டிஜிட்டல் தளத்தில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இயக்குநர் பாலாஜி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘சட்டமும் நீதியும்’ தொடரின் இரண்டாவது  சீசனில் வரலட்சுமி சரத்குமார் புதிதாக இணைந்திருக்கிறார்.

இந்த இணைய தொடரின் முதல் பாகத்தில் சட்டத்தரணி வேடத்தில் நடித்திருந்த சரவணனும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த இணைய தொடரை ஜீ 5 டிஜிட்டல் தளத்திற்காக 18 கிரியேட்டர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சசிகலா பிரபாகரன் தயாரித்துள்ளார்.

இரண்டாவது சீசன் குறித்து இயக்குநர் பேசுகையில், ” சட்டமும் நீதியும் தொடரின் முதல் சீசன் நீதிமன்றத்திற்கு வெளியே தீக்குளித்த ஒருவரின் அதிர்ச்சிகரமான சம்பவம் தொடர்பான வழக்காக இருந்தது. இந்த இரண்டாவது சீசனில் புதிய வழக்குகளுடன் அடுத்த கட்டத்தை எட்டி இருக்கிறோம்.

நீதிமன்ற தீர்ப்புகளை கடந்து அதிகாரம், சலுகை, பிரத்யேக முடிவுகள் ஆகியவை உண்மையை நோக்கிய பாதையை  எப்படி தீர்மானிக்கிறது? என்பதை இந்த சீசன் 2 விவரிக்கிறது ” என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.