செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் கனடா டொரோண்டோவில் ‘செய்யறிவு’ உலகில் செம்மொழித் தமிழ் மாநாடு

கனடா டொரோண்டோவில் ‘செய்யறிவு’ உலகில் செம்மொழித் தமிழ் மாநாடு

1 minutes read

2026ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 15ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை கனடா டொரோண்டோ நகரில் நடைபெறவிருக்கும் “செய்யறிவு உலகில் செம்மொழித் தமிழும் தமிழரும்” எனும் தலைப்பிலான தமிழ் ஆய்வு மாநாடு மொழியின் வளர்ச்சிக்கான புதிய கதவுகளைத் திறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மாநாட்டில் உலகம் முழுவதிலும் இருந்து தமிழ் அறிஞர்களும் ஆய்வாளர்களும் கலந்து கொள்கின்றனர். கனடாவில் வசிக்கும் நிமல் விநாயகம் மூர்த்தியைத் தலைவராகவும் தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் பேராசிரியர் மா. இராசேந்திரன், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கே.எஸ். குகதாசன் ஆகியோரைத் துணைத் தலைவர்களாகவும் மேலும் தமிழ் அறிஞர்களை உள்ளடக்கிய நிர்வாகக் குழுவும் துணைக் குழுக்களும் மாநாட்டின் ஏற்பாட்டில் மும்முரம் காட்டி வருகின்றனர்.

இந்த மாநாட்டுக் குழுவின் உறுப்பினராக மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்க மேனாள் தலைவரும் அயலகத் தொடர்புக் குழுத் தலைவருமான பெ. இராஜேந்திரன் இடம்பெற்றுள்ளார்.

மாநாட்டில் படைக்கப்படுவதற்காக 500க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. நான்கு நாள் நடைபெறும் இந்த மாநாட்டில் தமிழ் மொழி, கலை, இலக்கியம், பண்பாடு, தமிழ் மரபு சார்ந்த விடயங்கள் குறித்த ஆய்வுகள் நடைபெறுவதோடு, இன்றைய உலகின் புதிய ஊடகமான செய்யறிவின் துணையோடு எப்படி மேம்படுத்துவது, எப்படி அடுத்த தலைமுறைக்குக் கடத்துவது என்பது குறித்த ஆய்வுகள் இடம்பெறும் என்று மாநாட்டின் ஏற்பாட்டுக் குழு உறுப்பினர் பெ. இராஜேந்திரன் சொன்னார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.