மதுராந்தகம் – தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற மரகதம் குமரவேல் மற்றும் சத்தியபாமா ஆகிய இருவரும் இன்று (12) தமிழக சட்டமன்ற உறுப்பினர்களாக பதவியேற்றனர்.
தமிழகத்தில் நடைபெற்ற இரண்டு தொகுதிக்கான இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிட்ட மரகதம் குமரவேல் மற்றும் சத்தியபாமா ஆகிய இருவரும் வெற்றி பெற்றனர். இதனைத் தொடர்ந்து இவர்கள் இன்று சட்டப் பேரவை வளாகத்தில் உள்ள சபாநாயகரின் அறையில் தமிழக சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்றுக்கொண்டனர். அவர்களுக்கு சபாநாயகர் ஜே. சி.டி. பிரபாகர் பதவிப் பிரமாணமும், இரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
இருவரும் சட்டமன்ற உறுப்பினர்களாக பதவி ஏற்றுக்கொண்ட பின்னர் தலைமை செயலகத்தில் இருந்த முதல்வர் விஜயை நேரில் சந்தித்து இருவரும் வாழ்த்து பெற்றனர்.