செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் பிரான்ஸ் பாடசாலையில் 14 வயது மாணவன் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் அதிபரும் ஆசிரியரும் காயம்

பிரான்ஸ் பாடசாலையில் 14 வயது மாணவன் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் அதிபரும் ஆசிரியரும் காயம்

1 minutes read

பிரான்ஸில் உள்ள பாடசாலை ஒன்றில் 14 வயது மாணவன் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டுத் தாக்குதலில் அதிபரும் ஆசிரியர் ஒருவரும் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காயமடைந்த இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் இல்லை எனவும் அவர்கள் சிகிச்சை பெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஓபான் பகுதியில் அமைந்துள்ள ஜோசப்-லகானல் இடைநிலைப் பாடசாலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அண்மைக்காலமாக அந்நாட்டு உயர்நிலை வகுப்பு மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர் ஆர்ப்பாட்டங்களுக்கும் இந்தத் தாக்குதலுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

தாக்குதலை மேற்கொண்ட மாணவன் கிட்டார் இசைக்கருவிக்கான பைக்குள் துப்பாக்கியை மறைத்து வைத்து பாடசாலைக்கு எடுத்துச் சென்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. குறித்த மாணவன் வகுப்பறைக்குள் ஆசிரியரும் மாணவர்களும் இருந்த வேளையில் குறைந்தது நான்கு தடவைகள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார்.

சம்பவம் இடம்பெற்ற வேளையில் பாடசாலை ஊழியர் ஒருவர் சாதுரியமாகச் செயற்பட்டு, அந்த மாணவனிடமிருந்த துப்பாக்கியைப் பறித்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில் கொலை முயற்சி குற்றச்சாட்டின் கீழ் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சிறுவனுக்கு துப்பாக்கி எவ்வாறு கிடைத்தது என்பது தொடர்பில் துரித விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, உண்மை கண்டறியப்படும் என பிரான்ஸ் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.