இஸ்ரேலில் எதிர்வரும் 27ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் அந்நாட்டுப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது முழுமையான ஆதரவை வெளியிட்டுள்ளார்.
தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைத்தளப் பக்கத்தில் இது தொடர்பில் பதிவிட்டுள்ள அவர், இஸ்ரேலுக்குள்ளேயே எழுந்த கடுமையான எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் பெஞ்சமின் நெதன்யாகு மிகவும் வலிமையாகவும், துணிச்சலாகவும், விவேகமாகவும் செயற்பட்டுள்ளதாகப் பாராட்டியுள்ளார்.
அமெரிக்கா இவ்வாறானதொரு பலமான கூட்டாளியையே எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப், இஸ்ரேலின் பிரதமராக மீண்டும் தெரிவாவதற்காகக் களமிறங்கியுள்ள பெஞ்சமின் நெதன்யாகுவுக்குத் தனது முழுமையானதும் நிபந்தனையற்றதுமான ஆதரவை வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.