செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலண்டன் எல் நினோ தாக்கம்: இங்கிலாந்து உள்ளிட்ட வடமேற்கு ஐரோப்பாவில் கடும் புயல் மற்றும் தீவிர குளிருக்கான சாத்தியம்

எல் நினோ தாக்கம்: இங்கிலாந்து உள்ளிட்ட வடமேற்கு ஐரோப்பாவில் கடும் புயல் மற்றும் தீவிர குளிருக்கான சாத்தியம்

1 minutes read

எல் நினோ வானிலை மாற்றத்தின் தாக்கம் காரணமாக இங்கிலாந்து உள்ளிட்ட வடமேற்கு ஐரோப்பியப் பிராந்தியங்களில் அதிக ஈரப்பதத்துடன் கூடிய புயல் வானிலை நிலவுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த நான்கு தசாப்த காலப்பகுதியில் இந்த ஆண்டில் ஏற்பட்ட எல் நினோவே மிகவும் தீவிரமானதாகப் பதிவாகியிருக்கலாம் என ஐக்கிய நாடுகள் சபையின் வானிலை ஆய்வு மையத் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கமைய, ஒக்டோபர் மற்றும் டிசெம்பர் மாதங்களுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் வெப்பமண்டல பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பு வெப்பநிலை முன்னெப்போதும் இல்லாத வகையில் சாதனை அளவை எட்டும் என உலக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இந்த வானிலை மாற்றத்தின் தீவிரமான எதிர்விளைவுகள் ஏற்கனவே உலகளாவிய ரீதியில் உணரப்பட்டு வருகின்றன. குறிப்பா,க தென் அமெரிக்கப் பகுதிகளில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கு மற்றும் இந்தோனேசியாவில் தீவிரமடைந்த காட்டுத்தீ என்பன இதன் பிரதான தாக்கங்களாக அமைந்துள்ளன.

அதேவேளை, எல் நினோ தாக்கமானது துருவச் சுழலை பலவீனப்படுத்துவதற்கு வழிவகுக்கும் என்பதால், இங்கிலாந்தில் வழக்கத்திற்கு மாறாகக் கடுமையான குளிர் நிலவுவதற்கான அபாயம் அதிகரிக்கும் எனவும் உலக வானிலை ஆய்வு மையம் மேலும் தெரிவித்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.