செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலண்டன் இங்கிலாந்தின் கடலடி கேபிள்களை உளவு பார்க்கும் ரஷ்ய இழுவைப் படகுகள்: பாதுகாப்பை பலப்படுத்த தீவிரம்

இங்கிலாந்தின் கடலடி கேபிள்களை உளவு பார்க்கும் ரஷ்ய இழுவைப் படகுகள்: பாதுகாப்பை பலப்படுத்த தீவிரம்

1 minutes read

இங்கிலாந்தின் மிக முக்கியமான கடலடி கேபிள் வலையமைப்புகளை உளவு பார்ப்பதற்கும், அவற்றின் அமைவிடங்களை வரைபடமாக்குவதற்கும் ரஷ்யா தனது வர்த்தக மீன்பிடி இழுவைப் படகுகளைப் பயன்படுத்தி வருவதாக புதிய பகுப்பாய்வுத் தகவல்கள் கசிந்துள்ளன.

கப்பல் போக்குவரத்து கண்காணிப்புத் தரவுகளின்படி, கடந்த நான்கரை ஆண்டுகளில் ரஷ்ய இழுவைப் படகுகள் இவ்வாறான முக்கிய தகவல் தொடர்பு கேபிள்களின் மேல் வட்டமிட்டபடியோ அல்லது கேபிள்களின் வழித்தடங்களைப் பின்தொடர்ந்தபடியோ செயற்பட்ட 500க்கும் மேற்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளன. கடலடி கேபிள்களைச் செயலிழக்கச் செய்வதற்கு நீர்மூழ்கிக் கப்பல்களுக்குப் பயிற்சி அளிக்கும் நோக்கில், ஆர்க்டிக் கடற்பரப்பில் ரஷ்யா முன்னெடுத்த இரகசியப் பயிற்சிகளை நேட்டோ படையினர் அண்மையில் இடைமறித்திருந்த நிலையிலேயே, இந்த விவரங்கள் வெளியாகியுள்ளன.

இவ்வாறான அச்சுறுத்தல்களைத் தொடர்ந்து, நாட்டின் முக்கியமான கடலடி உட்கட்டமைப்புகளுக்கு நாசவேலைகளில் ஈடுபடுவோருக்கு எதிராக நீண்ட கால சிறைத் தண்டனை மற்றும் வரையறையற்ற அபராதம் உள்ளிட்ட கடுமையான தண்டனைகளை அறிமுகப்படுத்த இங்கிலாந்து அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

அதேவேளை, நாட்டின் கடலடி உட்கட்டமைப்பு மற்றும் தொலைத்தொடர்பு வலையமைப்புகளின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், இங்கிலாந்து பாதுகாப்பு அமைச்சு மேலதிகமாக 330 மில்லியன் பவுண்டுகள் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.