செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் ஜெர்மனிக்குக் கடத்தப்படவிருந்த 3,000க்கும் மேற்பட்ட சிலந்திகள் மீட்பு: மூவர் கைது

ஜெர்மனிக்குக் கடத்தப்படவிருந்த 3,000க்கும் மேற்பட்ட சிலந்திகள் மீட்பு: மூவர் கைது

1 minutes read

பெருவிலிருந்து ஜெர்மனிக்கு சட்டவிரோதமாகக் கடத்தப்படவிருந்த 3,000க்கும் மேற்பட்ட டாரன்டுலா வகை சிலந்திகளை, அந்நாட்டு அதிகாரிகள் லிமா சர்வதேச விமான நிலையத்தில் வைத்து மீட்டுள்ளனர். நேற்று இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் ஜெர்மனியைச் சேர்ந்த இருவர் மற்றும் போலந்து நாட்டைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவர்கள் மீது குற்றவியல் சட்டங்களின் கீழ் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விமான நிலையத்தில் முன்னெடுக்கப்பட்ட வழக்கமான சுங்கச் சோதனையின்போது, சந்தேகநபர்கள் கொண்டுவந்திருந்த பயணப் பொதிகளுக்குள் ஏதோ ஒன்று அசையும் தன்மையுடன் காணப்பட்டதை அதிகாரிகள் அவதானித்துள்ளனர். இதனையடுத்து அப்பொதிகளைப் பிரித்து முழுமையாகச் சோதனையிட்டபோதே, பெட்டிகளுக்குள் உயிருடன் அடைத்து வைக்கப்பட்டிருந்த 3,000க்கும் மேற்பட்ட சிலந்திகள் கண்டுபிடிக்கப்பட்டு, கடத்தல் முயற்சி முறியடிக்கப்பட்டது.

ஐரோப்பிய நாடுகளில் இவ்வாறான ஒரு டாரன்டுலா சிலந்தி சுமார் 500 யூரோக்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக வனவிலங்கு கட்டுப்பாட்டுத் தொழில்நுட்ப வல்லுநர் கோரா சுவாரெஸ் தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில், ஒரே ஒரு கடத்தல் முயற்சியின் மூலம் சுமார் 1.5 மில்லியன் யூரோக்கள் பெறுமதியான சட்டவிரோத வணிகம் முன்னெடுக்கப்பட்டிருக்கக்கூடும் என்றும் அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சேகரிக்கப்பட்டு கொண்டுவரப்பட்ட இந்த சிலந்திகள், முட்டைகள், சிறிய குஞ்சுகள் மற்றும் முழுமையாக வளர்ச்சியடைந்த சிலந்திகள் என பல்வேறு வளர்ச்சி நிலைகளில் பயணப் பொதிகளுக்குள் அடைக்கப்பட்டிருந்ததாக அதிகாரிகள் விவரித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.