சதாம்டன் துறைமுகத்திலிருந்து வரலாற்றுப் புகழ்பெற்ற டைட்டானிக் கப்பல் தனது கன்னிப் பயணத்தை ஆரம்பித்தபோது, அதனை நேரில் பார்வையிடுவதற்காக வழங்கப்பட்ட அரிய பார்வையாளர் அனுமதிச் சீட்டு ஒன்று ஏலத்தில் விற்பனை செய்யப்படவுள்ளது.
வில்ட்ஷயரின் டிவைசஸ் (Devizes, Wiltshire) நகரில் இம்மாதம் 21ஆம் திகதி நடைபெறவுள்ள இந்த ஏல நிகழ்வில், குறித்த அனுமதிச் சீட்டானது 50,000 பவுண்டுகள் வரை விலை போகக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த அரிய ஆவணம், எலிசா டிப்டன் என்பவருக்குச் சொந்தமானதாகும். இவருடைய 18 வயதான மகன் வில்லியம் டிப்டன், டைட்டானிக் கப்பலில் இரண்டாம் வகுப்புப் பயணியாகப் பயணித்திருந்த வேளையில் இடம்பெற்ற கோர விபத்தில் உயிரிழந்தார்.
குறித்த பார்வையாளர் அனுமதிச் சீட்டுடன், உயிரிழந்த வில்லியம் டிப்டனின் முதல் திருவிருந்து சான்றிதழும் இந்த ஏலத்தின் போது விற்பனைக்கு வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
