செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா நடிகர் இனிகோ பிரபாகர் நடிக்கும் ‘மின்னும் ஓர் இரவு’ படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா

நடிகர் இனிகோ பிரபாகர் நடிக்கும் ‘மின்னும் ஓர் இரவு’ படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா

1 minutes read

தமிழ் திரையுலகில் நட்சத்திர நடிகராக மின்னுவதற்கு கடுமையாக உழைத்து வரும் நடிகர் இனிகோ பிரபாகர் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘மின்னும் ஓர் இரவு’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

அறிமுக இயக்குநர் சிவப்பிரபு செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மின்னும் ஓர் இரவு’ திரைப்படத்தில் இனிகோ பிரபாகர், அஞ்சு கிருஷ்ணா அசோக், சத்யா, ‘அருவி’ மதன், ‘அருவி’ பாலா, யாசர், ராஜன், பிரதிக்ஷா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சுரேஷ்குமார் சுந்தரம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பிரணவ் சூரஜ் இசையமைத்திருக்கிறார். சஸ்பென்ஸ் கிரைம் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை றொபர்ட் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் டொக்டர் பிறொபர்ட் ராஜ் தயாரித்திருக்கிறார்.

எதிர்வரும் 27-ம் திகதி முதல் உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குநர்கள் எஸ். ஆர். பிரபாகரன்- மணிகண்டன் ஆகியோர் சிறப்பு அதிதிகளாக பங்கு பற்றினர்.

படத்தைப் பற்றி தயாரிப்பாளர் பேசுகையில், ”ஒரு கிராமத்தில் இரவில் நண்பர்கள் குழுவினருக்கு எதிர்பாராத வகையில் புதையல் கிடைக்கிறது. அதனால் ஏற்படும் விளைவுகளும்.. சம்பவங்களும் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களும் தான் இப்படத்தின் கதை. ஒரு பகல் – ஒரு இரவு என 24 மணி நேரத்திற்குள் நடைபெறும் கதை என்பதால் திரைக்கதை விறுவிறுப்பாக இருக்கிறது. ரசிகர்களுக்கு வித்தியாசமான திரை அனுபவத்தை வழங்கும்” என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.