தமிழ் திரையுலகில் பிரபலமான நடிகர் முகேன் ராவ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘நிறம்’ திரைப்படத்தில் இடம் பெற்ற ‘என் மகளே..’ எனத் தொடங்கும் பாடலும், பாடலுக்கான பிரத்யேக காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் பல்ராம் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நிறம் ‘ திரைப்படத்தில் முகேன் ராவ், பிரீத்தி அஸ்ராணி, தான்யா ஹோப், நிதின் சத்யா, சுரேகா வாணி, ஸ்ரீஜித் ரவி, அன்பு மயில்சாமி, திருநாவுக்கரசு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
சான்டோனியோ டெர்சியா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ‘மெலோடி சாம்ராட்’ டி. இமான் இசையமைத்திருக்கிறார்.
மெடிக்கல் கிரைம் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை கே ஸ்கொயர் சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. பிந்து மாதவி தயாரித்திருக்கிறார்.
எதிர்வரும் 27 ஆம் திகதி முதல் உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற ‘என் மகளே ஓடிவா… என் உலகே நீ தானே அல்லவா… என் மகளே தேடி வா… என் உயிரை கையோடு கொண்டு வா..’ எனத் தொடங்கும் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.
இந்த பாடலை பாடலாசிரியர் பா. விஜய் எழுத, பின்னணி பாடகர் பல்ராம் பாடியிருக்கிறார். தந்தைக்கும், மகளுக்கும் இடையேயான உணர்வுபூர்வ உறவை விவரிக்கும் இந்த பாடல் … இசை ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.