பிலிப்பைன்சில் அண்மையில் நடந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ரோட்ரிகோ டுடேர்தே (71) செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்ததாவது: நான் அதிபராகப் பதவியேற்றதும், குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்கப்படும். அந்த நடவடிக்கைகளின்போது அடங்க மறுக்கும் குற்றவாளிகள் சுட்டுத் தள்ளப்படுவார்கள். இதற்காக, துல்லியமாகச் சுடும் ராணுவத்தினர் குற்ற ஒழிப்புப் படையில் அதிகளவில் சேர்க்கப்படுவார்கள். பிலிப்பைன்ஸில் கடந்த 2006-ம் ஆண்டு ஒழிக்கப்பட்ட மரண தண்டனை மீண்டும் கொண்டு வரப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
2