செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் மணப்பெண்ணை திருமணம் முடிந்த சில நிமிடங்களிலேயே விவாகரத்து செய்த மணமகன்மணப்பெண்ணை திருமணம் முடிந்த சில நிமிடங்களிலேயே விவாகரத்து செய்த மணமகன்

மணப்பெண்ணை திருமணம் முடிந்த சில நிமிடங்களிலேயே விவாகரத்து செய்த மணமகன்மணப்பெண்ணை திருமணம் முடிந்த சில நிமிடங்களிலேயே விவாகரத்து செய்த மணமகன்

1 minutes read

திருமணம் முடிந்த சில நிமிடங்களிலேயே மணப்பெண்ணை  மணமகன் விவாகரத்து செய்ததால் திருமண விழாவிற்கு வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

சவுதி அரேபியாவில் ஒரு ஜோடிக்கு இரு வீட்டார் ஒப்புதலுடன் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த தம்பதியினர் ஓட்டலுக்கு வந்துள்ளனர்.

அப்போது ஓட்டல் அறைக்கு வந்தவுடன் மணமகள் தனது செல்போனில் மூழ்கி போனார். மணமகளுடன் பேச விரும்புவதாக மணமகன் கூறியுள்ளார். ஆனால் மணப்பெண் இதனை கண்டுகொள்ளவில்லை. இதனால் கோபம் அடைந்த மணமகன் இது குறித்து விசாரித்துள்ளார். அதற்கு தன்னுடைய திருமணத்திற்கு வாழ்த்து தெரிவித்த என்னுடைய தோழிகளுக்கு நன்றி தெரிவித்து கொண்டிருப்பதாக கூறியுள்ளார்.

இதனால் கோபம் அடைந்த மணமகன் உனக்கு நான் முக்கியம் இல்லையா? என்று கேட்டுள்ளார் . அதற்கு மணமகள் விளையாட்டு தனமாக ஆமாம் என்று கூறியுள்ளார். இதனால் கோபமடைந்த மணமகன், அவரை விவாகரத்து செய்வதாக கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பி சென்று விட்டார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மணமகள் செய்வது அறியாது திகைத்து நின்றார். இது குறித்து தனது பெற்றோருக்கு தெரிவித்தார். திருமணமான சில நிமிடங்களிலேயே மணமகன்,  மனைவியை விவாகரத்து செய்தால், திருமண விழாவிற்கு வந்தவர்கள் மிகவும் சோகமாக வீட்டிற்கு திரும்பினர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.