முருகதாஸிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய ஜெகன் இயக்கும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தையும் விக்னேஷ் சிவனின் அடுத்தப் படத்தையும் நயன்தாரா தயாரிக்கப் போவதாக செய்திகள் வெளிவந்தன.
அச்செய்திகளை நயன்தாரா மறுத்துள்ளார். இதுகுறித்து இணையத்தளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது: இதுபோன்ற செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை. எனக்கு நடிக்க மட்டுமே தெரியும். அது மட்டும்தான் என் வேலை என நினைக்கிறேன். படங்களைத் தயாரிப்பதாக வெளிவந்த செய்திகள் எல்லாம் ஆதாரமற்றவை. எனக்கு அதில் ஆர்வம் கிடையாது என்று பேட்டியளித்துள்ளார்.
நயந்தாரா தற்போது விக்ரம் நடிக்கும் இருமுகன், கார்த்தி நடிக்கும் காஷ்மோரா, வெங்கடேஷ் நடிப்பில் பாபு பங்கரம் (தெலுங்கு), சற்குணம் உதவி இயக்குநர் தாஸ் இயக்கும் படம், மோகன் ராஜா – சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகும் படம் என 5 படங்களில் நடித்துவருகிறார்.