மாலத்தீவு நாட்டின் முன்னாள் அதிபர் முகம்மது நஷீத்துக்கு, பிரிட்டன் அரசு, அரசியல் தஞ்சம் அளித்துள்ளது.இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள நாடு, மாலத்தீவு. முஸ்லிம்கள் பெரும்பான்மை மிக்க இந்நாட்டில், 2008ல், ஜனநாயக ரீதியில் நடந்த முதல் தேர்தலில், முகம்மது நஷீத், 49, வெற்றி பெற்று அதிபரானார். நான்கு ஆண்டுக்கு பின், முகம்மது நஷீத்தின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது.
அவருக்கு எதிராக, பயங்கரவாத குற்றம் சுமத்தப்பட்டு, விசாரணை முடிவில், 13 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதற்கு, சர்வதேச நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. சர்வதேச நாடுகளின் வழக்கறிஞர்கள், நஷீத்துக்கு ஆதரவாக, நீதிமன்றத்தில் மேல்
முறையீடு செய்து வாதாடினர்.இதைத் தொடர்ந்து, உடல்நலக் கோளாறு காரணமாக விடுவிக்கப்பட்ட நஷீத், சிகிச்சை பெற லண்டன் சென்றார். அவர் மனைவியும், குழந்தைகளும், லண்டனில் தங்கினர்.
இந்நிலையில், நஷீத்துக்கு, பிரிட்டன் அரசு, அரசியல் தஞ்சம் அளித்துள்ளது. பிரிட்டனில், நஷீத்துக்கு, அரசியல் அகதி அந்தஸ்து தரப்பட்டுள்ளதாக, அவர் வழக்கறிஞர் ஹாஸன் லத்தீப் கூறியுள்ளார்.
6