செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா நானும் நயன்தாராவும் பேசிக்கொள்ளும் காட்சிகள் இளைஞர்களுக்கு மிகவும் பிடிக்கும் | சிம்புநானும் நயன்தாராவும் பேசிக்கொள்ளும் காட்சிகள் இளைஞர்களுக்கு மிகவும் பிடிக்கும் | சிம்பு

நானும் நயன்தாராவும் பேசிக்கொள்ளும் காட்சிகள் இளைஞர்களுக்கு மிகவும் பிடிக்கும் | சிம்புநானும் நயன்தாராவும் பேசிக்கொள்ளும் காட்சிகள் இளைஞர்களுக்கு மிகவும் பிடிக்கும் | சிம்பு

1 minutes read

பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா, சூரி நடிப்பில் உருவாகியுள்ள படம், ‘இது நம்ம ஆளு’. குறளரசன் இசையமைத்துள்ளார்.

பல காரணங்களாக இந்தப் படத்தின் வெளியீட்டுத் தேதி தள்ளிக்கொண்டே போனது. இந்நிலையில் படம் வருகிற வெள்ளிக்கிழமை (மே 27) வெளியாவது உறுதியாகியுள்ளது. இதனால் நீண்டநாள்களாக இருந்த தடங்கல்கள், பிரச்னைகளைத் தாண்டி படம் வெளிவருகிறது.

350க்கும் அதிகமான திரையரங்குகளில் படம் வெளியாகிறது. சென்னையில் எஸ்பிஐ சினிமாஸ் படத்தை வெளியிடுகிறது. இந்தப் படத்தில் நடித்தது குறித்து சிம்பு கூறியதாவது:

நான் இதுபோன்ற ஒரு படம் பண்ணியதில்லை. இதில் ஓபனிங் பாட்டு இல்லை. சண்டைக்காட்சி இல்லை. இதுபோன்ற ஒரு படத்தில் நடிப்பது எனக்கு ரிஸ்க் தான். இருந்தும் நடித்ததற்குக் காரணம், அதன் கதை.

நானும் நயன்தாராவும் பேசிக்கொள்ளும்  காட்சிகள் இளைஞர்களுக்கு மிகவும் பிடிக்கும். இதுபோன்ற ஒரு படத்தில் புதுமுகம் நடித்தாலும் எடுபடும். ஒரு நட்சத்திரம் நடித்தால் இன்னும் பேசப்படும். அதனால்தான் நான் நடித்தேன்.

ஆன்மிகம் மீது எனக்கு ஈடுபாடு வந்துள்ளது. என்னைப் பற்றிய பல கேள்விகளுக்கு அதன்மூலம் விடை தெரிந்துகொண்டேன் என்று அவர் கூறியுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.