ஜப்பான் விமான நிலையத்தில் இருந்து புறப்பட இருந்த கொரிய விமானத்தின் இன்ஜினில் திடீர் தீ ஏற்பட்டது. இதையடுத்து அவசர வாயில் வழியாக விமானத்தில் இருந்த 300 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள ஹனடோ விமான நிலையத்தில் இருந்து தென்கொரியாவின் கிம்போ நகருக்கு செல்வதற்காக ‘கொரியா ஏர்’ நிறுவனத்தி–்ன் போயிங் விமானம் தயாராக இருந்தது. இந்த விமானத்தில் 302 பயணிகள் மற்றும் 17 விமான ஊழியர்கள் இருந்தனர்.
இந்நிலையில் விமானத்தில் இருந்த என்ஜினின் ஒரு பகுதியில் திடீரென தீப்பிடித்தது. இதனால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக விமானத்தில் இருந்த அவசர வாயில்கள் திறக்கப்பட்டு விமானத்தினுள் இருந்த பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். இதனையடுத்து விரைந்த தீயணைப்பு துறையினர் விமானத்தில் ஏற்பட்ட தீயை அணைத்தனர்.