இங்கிலாந்தில் மான் செஸ்டரை சேர்ந்தவர் கார்ல்குரூக் (25), . சமீபத்தில் இவர் 5பவுண்டுக்கு ஜாக்பாட் லாட்டரி வாங்கினார்.
அதன் குலுக்கல் சமீபத்தில் நடந்தது. அதில் அவருக்கு 1 கோடி ஜாக்பாட் பரிசு தொகை விழுந்தது. இதனால் அவர் இன்ப அதிர்ச்சியும் ஆனந்த கண்ணீர் வடித்தார்.
ஒரே நாளில் கோடீசுவரர் ஆகி விட்ட குரூக் தான் பார்த்துக் கொண்டிருந்த கூலி வேலையை கைவிடவில்லை. மாறாக மறுநாளே வேலைக்கு சென்று விட்டார்.
அதுகுறித்து கூறிய அவர் லாட்டரியில் ஜாக்பாட் பரிசு விழுந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. அதற்காக பணத்தை ஊதாரித்தனமாக செலவிடமாட்டேன். மேலும் எனது வேலையை விட மாட்டேன். மாறாக 12 மணி நேரம் கடுமையாக உழைப்பேன். மிகவும் மகிழச்சியுடன் பணியாற்றுவேன் என்றார். இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.