விடுதலைப்புலிகளுடனான இறுதிக்கட்டப் போரில் காணாமல் போன தமிழர்கள் 16,000 பேரின் நிலைமை என்ன? என்ற விவரத்தை இலங்கை அரசு வெளியிட வேண்டும் என்று சர்வதேச செஞ்சிலுவை சங்கம் (ஐசிஆர்சி) வலியுறுத்தியது.
இலங்கையில் கடந்த 14 மாதங்களாக நடத்திய ஆய்வு அறிக்கையை சர்வதேச செஞ்சிலுவை சங்கக் குழு, கொழும்பில் வெளியிட்டது. 34 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: விடுதலைப்புலிகளுடனான இறுதிக்கட்டப் போர் முடிவடைந்து பல ஆண்டுகள் ஆகிவிட்ட பின்னரும், 16,000 பேரை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
அவர்களது நிலை என்ன ஆனது? தற்போது எங்குள்ளனர்? அன்றாட வாழ்க்கைக்கு அவர்கள் சந்திக்கும் பொருளாதார, சட்ட, நிர்வாக பிரச்னைகள் உள்ளிட்ட விவரங்களை அவர்களின் குடும்பத்தினர் அறிய
விரும்புகின்றனர்.ஆகையால், காணாமல் போனோரின் நிலை குறித்த முழு விவரங்களை இலங்கை அரசு அதிகாரிகள் வெளியிட வேண்டும் என்று அந்த அறிக்கையில் சர்வதேச செஞ்சிலுவை சங்கக் குழு கேட்டுக் ண்டுள்ளது.
இலங்கையில் கடந்த 1989-ஆம் ஆண்டில் சர்வதேச செஞ்சிலுவை சங்கக் கிளை ஏற்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, காணாமல் போனதாக கூறப்படும் நபர்கள் குறித்து அவர்களின் குடும்பத்தினர்
அளிக்கும் தகவல்களை அந்தக் கிளை பதிவு செய்து வருகிறது.
உலகிலேயே அதிக அளவுக்கு காணாமல் போன நபர்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக இலங்கை திகழ்கிறது. கடந்த 1994-ஆம் ஆண்டில் மட்டும், காணாமல் போனது தொடர்பாக இலங்கை அரசுக்கு
65,000 புகார்கள் அளிக்கப்பட்டன. அதில், விடுதலைப்புலிகள்-இலங்கை ராணுவத்துக்கு இடையேயான போரின்போது காணாமல் போனோரும் அடங்குவர்.