சிரியாவில் துருக்கி எல்லை அருகே ஹசாகா மாகாணம் உள்ளது. இந்த மாகாணம், குர்து இனத்தவரின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்குள்ள காமிஷ்லி நகரின் பாதுகாப்பு தலைமையகத்தில் நேற்று அடுத்தடுத்து 2 குண்டுவெடிப்புகள் நடந்தன.
முதல் குண்டு வெடிப்பு கார் குண்டுவெடிப்பு ஆகும். 2–வது குண்டுவெடிப்பு, மோட்டார் சைக்கிள் குண்டுவெடிப்பு ஆகும்.
இவ்விரு குண்டுவெடிப்புகளாலும் அந்தப் பகுதி குலுங்கியது. இவற்றில் சிக்கி 50 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர்.
உடனடியாக சம்பவ இடத்துக்கு மீட்பு படையினர் விரைந்து வந்து படுகாயம் அடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்சுகளில் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இரு குண்டுவெடிப்புகளில் ஒன்று, துருக்கியின் நுசாய்பின் நகரில் பாதிப்பை ஏற்படுத்தியது. அங்கு கடைகளின் ஜன்னல்கள் தூள், தூளாகின. 2 பேர் காயமும் அடைந்தனர்.
இவ்விரு குண்டுவெடிப்புகளுக்கும் ஐ.எஸ். இயக்கத்தினர் பொறுப்பேற்றனர்.