செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் ரஷ்ய உளவாளிகளுக்கு டொனால்டு டிரம்ப் உதவுகிறார் | ஹிலாரி கிளிண்டன் குற்றச்சாட்டுரஷ்ய உளவாளிகளுக்கு டொனால்டு டிரம்ப் உதவுகிறார் | ஹிலாரி கிளிண்டன் குற்றச்சாட்டு

ரஷ்ய உளவாளிகளுக்கு டொனால்டு டிரம்ப் உதவுகிறார் | ஹிலாரி கிளிண்டன் குற்றச்சாட்டுரஷ்ய உளவாளிகளுக்கு டொனால்டு டிரம்ப் உதவுகிறார் | ஹிலாரி கிளிண்டன் குற்றச்சாட்டு

1 minutes read

வரும் நவம்பர் 8-ந்தேதி நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில்

ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரி கிளின்டனும், குடியரசு கட்சி சார்பில் டொனால்டு டிரம்ப்பும் போட்டியிடுகிறார்கள். இதற்கான தேர்தல் பிரசார வியூகம், நிதி திரட்டுவது, ஆதரவாளர்கள் பட்டியலை தயார் செய்வது ஆகியவற்றை ஜனநாயக கட்சியினர் கம்ப்யூட்டரில் பதிவு செய்து வைத்திருந்த நிலையில், அந்த விபரங்கள் அனைத்தும் ரஷ்ய உளவாளிகளால் திருடப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ஹிலாரி கிளிண்டன் பாக்ஸ் நியூஸ் சேனலுக்கு இன்று அளித்த பேட்டி பின்வருமாறு:-

தேசிய ஜனநாயக கமிட்டியின் கம்ப்யூட்டர்களில் இருந்து தகவல்களை ரஷ்யாவின் உளவுத்துறை திருடியது எனக்கு தெரியும். திருடப்பட்ட பல இமெயில்களை வெளியிட ரஷ்யா திட்டமிட்டிருந்ததும் எனக்கு தெரியும். ரஷ்ய அதிபர் புதினுக்கு ஆதரவாகவும், பின்புலமாகவும் டொனால்டு டிரம்ப் செயல்பட்டு வருவதை நான் அறிவேன். எங்கள் நாட்டு தேர்தலில், ஜனநாயகத்தில் ரஷ்யா தலையிடுவது ஒரு முக்கிய பிரச்சனையாகும். இதுபோன்ற ஒரு காரியத்தை எந்த நாடு செய்தாலும் அதை அமெரிக்கா பொறுத்துக் கொள்ளாது. அதிபர் ஒபாமாவைவிட ரஷ்ய அதிபர் புதின் வலிமையான தலைவர் என டிரம்ப் பாராட்டியிருக்கிறார். எனது தேர்தல் பிரசாரங்களை சீர்குலைக்க இதுபோன்ற செயல்களில் டிரம்ப் ஈடுபட்டு வருவது நாட்டின் பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிக்கும்.

இவ்வாறு ஹிலாரி தெரிவித்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.