சூடான் நாட்டில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மொத்தமுள்ள 18 மாகாணங்களில் 13 மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக கிழக்கு ஆப்பிரிக்க நாடான சூடானின் வழியாக பாயும் நைல் நதியில் நீரின் அளவு முன் எப்போது இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது.
மழை வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்பில் இதுவரை 76 பேர் உயிரிழந்துள்ளதாக உள்துறை மந்திரி கூறியுள்ளார். ஏராளமான வீடுகள் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. வெள்ளத்தால் 3,206 வீடுகள் முழுவதுமாக அழிந்துள்ளது. 3,048 வீடுகள் சேதமடைந்துள்ளது.
வளர்ச்சி குறைந்த உள்கட்டமைப்பு காரணமாக சூடானின் பெரும்பாலான பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக கிராமப்புறங்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளன.